வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
மாடலிங்கில் ஆரம்பித்து விளம்பரங்கள், தொலைக்காட்சி தொடர்கள், வெப்சீரிஸ்களை தொடர்ந்து திரைப்படங்களில் சாதித்து கொண்டிருக்கிறார் கோவையை சேர்ந்த நடிகை குயின்சி ஸ்டான்லி.
'என்னை போன்ற வளரும் நடிகைகளுக்கு சொல்வது இது தான்... முதலில் நம்மை, நம்முடைய வேலையை நம்ப வேண்டும். வாய்ப்புகளுக்கு முயற்சி செய்து காத்திருக்க வேண்டும்' என்று 'அட்வைஸ்' செய்கிறார் குயின்சி.
இவர் தினமலர் சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக மனம் திறந்ததாவது: அப்பா, அம்மா தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கின்றனர். நாங்கள் நடுத்தர குடும்பம். கோவையில் கல்லுாரியில் கம்ப்யூட்டர் டெக்னாலஜி படித்து கொண்டிருந்தேன். 3ம் ஆண்டு படிக்கும்போது மாடலிங் துறை மீது ஆசை ஏற்பட்டது. 2020ல் முதன் முதலாக மாடலிங் செய்ய தொடங்கினேன். மாடலிங், ராம்ப்வாக் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு வந்தது. விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு உருவானது.
என் குடும்பத்திலிருந்து இதுவரை இது போன்ற பணிக்கு யாரும் வராததால் இதை அவர்கள் புதிதாக பார்த்தனர். என்னை அவர்கள் புரிந்துகொள்ளாதது கஷ்டமாக இருந்தது. என் ஊக்க சக்தியாக பாட்டி, சித்தி இருந்தனர். கஷ்டங்களை மனம் விட்டு பேச தோழிகள் கிடைத்தார்கள். அவர்கள் என்னை ஊக்கப்படுத்தினர். அதிலிருந்து என்னை நானே புரிந்து கொண்டு எனக்கு பிடித்த வேலையை கஷ்டமாக இருந்தாலும் மகிழ்ச்சியாக செய்ய ஆரம்பித்தேன். ஏராளமான ஆடிஷன்களில் பங்கேற்று வாய்ப்புக்காக காத்திருந்தேன்.
கடவுள் தந்த வாய்ப்பாக 'அன்பே வா' சீரியலில் 2வது ஹீரோயினாக நடித்தேன். தொடர்ந்து வாய்ப்பு வரத்தொடங்கியது. அதன்பின் தனியார் டி.வி., நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் பலரின் அன்பு, ஆதரவை சம்பாதித்தேன். இதனை தொடர்ந்து விக்ராந்துடன் 'விடியும் வரை காத்திரு' எனும் படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது. அடுத்து ஹீரோயினாக நடித்த படம் இன்னும் வெளியாகவில்லை.
இந்த படங்கள் வெளியானதும் எனக்கு தனி அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறேன். புதிய படங்களிலும் 'கமிட்' ஆகியிருக்கேன். தற்போது திரை நடிகர் விமலுடன் வெப்சீரிசில் நடிக்கிறேன். இப்போது தான் படிப்படியாக பெற்றோருக்கு என்மீது நம்பிக்கை வரத்தொடங்கி இருக்கிறது. நான் சினிமாவிற்குள் நுழைவதற்கு பட்ட கஷ்டங்களை கஷ்டமாக நினைக்கவில்லை. என் வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான பாடமாக கருதுகிறேன். பல ஆண்டுகள் கழித்து என் திரை பயணத்தை திரும்பி பார்க்கும் போது கடந்து வந்த பாதையை நினைத்து பெருமையாக நினைக்க வேண்டும், என்றார்.