விஜய் டிவி பிரியங்கா 2வது திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா...! | பாலோயர்ஸ்: உண்மையைப் பேசியுள்ள பூஜா ஹெக்டே | ரீ-ரிலீஸில் வரவேற்பைப் பெறுமா 'சச்சின்' | நஷ்டஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்: 'குட் பேட் அக்லி' தயாரிப்பாளர் விளக்கம் | ஓடிடி.,யிலும் தோல்வியடைந்த யுவன் ஷங்கர் ராஜா படம் | ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம் | கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு |
'திருஷ்டி பூசணிக்காயை இப்படி ரோட்டுல உடைக்கலாமா... ஏதாவது பைக் வழுக்குச்சுன்னா, ஒரு குடும்பம் சிதைஞ்சிருமே...' - சென்னை சாலிகிராமத்தில் அக்கறையாய் கேள்வி கேட்கிறார் ருக்மணி பாபு! 'டப்பிங்' கலைஞர், ஒப்பனை உதவியாளர், துணை நடிகர் என திரைத்துறையில் 28 கால அனுபவம்; தனக்கு நல்ல அங்கீகாரம் பெற்றுத்தரும் என, உறாங்குட்டான் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.d
இந்த சமூக அக்கறைக்கு என்ன காரணம் பாபு?
உடைச்ச 'திருஷ்டி' பூசணிக்காய் வழுக்கி, 2019ம் ஆண்டுல என் மகன் சந்திச்ச விபத்து; தாடையில காயம், கை எலும்பு முறிஞ்சு போச்சு; அப்போ இருந்து இந்த அறிவுரையை சொல்லிட்டு இருக்குறேன்!
'முரட்டு தோற்றம்' - கை கொடுத்திருக்கா?
எங்கே... கலை நிகழ்ச்சிக்காக இலங்கை விமான நிலையத்துல இறங்கினதும் சந்தேகப்பட்டாங்க! இரவுநேர வாகன சோதனையில 'மிமிக்ரி' பண்ணி என்னை நிரூபிக்க வேண்டியிருக்கு! இயக்குனர் பாலா பட வாய்ப்பு நழுவிருச்சு!
'சினிமா'ன்னா அவ்வளவு இஷ்டமா?
'நடிகன்' ஆகுற கனவுல சென்னைக்கு வந்த நான் அம்மா கூப்பிட்டதும் உடனே திரும்பிட்டேன். என் கனவை புரிஞ்சுக்கிட்ட அம்மா மறுபடியும் சென்னைக்கு அனுப்பி வைச்சாங்க! 'அம்மா'ன்னா அவ்வளவு இஷ்டம்... அதனாலதான், நான் 'ருக்மணி' பாபு!
உங்க பலவீனம்?
எல்லாரையும் நம்பிடுவேன். 'படம் பாதியில நிற்குது'ன்னு சொன்னவங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்துட்டு, 'நம்மளால நல்லது நடக்கப் போகுது'ன்னு நம்பியிருக்கேன்! நடிச்சு கொடுத்த படத்துக்கு ஊதியம் தராதப்போ கை பிசைஞ்சு நின்னுருக்கேன்!
உங்க திறமையை உரசிப் பார்த்த அனுபவம்?
கோவை பேருந்து நிலையத்துல உடல்நலமில்லா மனிதனா நடிச்சிருக்கேன்; பரிதாபப்பட்ட ஒருத்தர் எனக்கு தர்மம் பண்ணினார்; 'கலைத்திறமைக்கான வெகுமதி'ன்னு அவர் தந்த ரூபாயை ப்ரேம் போட்டு இன்னும் வைச்சிருக்கேன்.