மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தன்னிகரில்லா நடிப்பின் மூலம் ஊரையே திரும்பி பார்க்க வைத்து, 'முல்லையாக' படர்ந்து பரவி வீடுகளில் பெண்களின் செல்லப் பிள்ளையாக வலம் வருகிறார் நடிகை லாவண்யா.
அவர் கூறியது:
நான் திருப்பூர் பொண்ணு. அம்மா புடவை, மளிகை பிசினஸ் செய்கிறார். அப்பா கொரியர் சர்வீஸ் வைத்துள்ளார். கூட பிறந்தவங்க ஒரு அக்கா, தம்பி. பள்ளி படிப்பு எல்லாம் திருப்பூர்ல தான். கோவையில் பி.ஏ., பொருளாதாரம் முடித்தேன்.
எங்கள் ஊர் பகுதியில் கல்லுாரி படிப்பு முடிந்தவுடன் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பர். ஆனால் நான் பள்ளியில் படிக்கும் போது இருந்தே வேலைக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும் என்ற உறுதி கொண்டிருந்தேன். கல்லுாரியில் படிக்கும் போதே எனது மேற்படிப்பிற்காக பணம் சேமித்து வைக்க தொடங்கினேன். இதற்காக 40 பள்ளி மாணவர்களுக்கு 'டியூஷன்' எடுத்தேன்.
அப்பணத்தை கொண்டு வங்கி வேலைக்கு படித்தேன். பின்னர் வங்கி வேலை கிடைத்தது. வங்கியில் கிளை மேளாளராக ஆக வேண்டும் என்பதே என் குறிக்கோள். ஆனால் இயந்திர வாழ்க்கையை தாண்டி ஏதாவது சாதிக்க வேண்டும் என தோன்றியது.
புடவை விற்பனை பிசினஸ் செய்து கொண்டிருந்தேன். அப்போது அவற்றை போட்டோ எடுக்க வேண்டியிருந்தது. அதற்கு நானே மாடலாக இருந்தேன். பின்னர் விளம்பர படங்கள், மாடலிங் என கிடைக்கும் நேரத்தில் செய்து கொண்டிருந்தேன். அதன் மூலம் மாடலிங்கினுள் வந்தேன்.
2018ல் 'குயின் ஆப் மெட்ராஸ்' டைட்டில் வாங்கினேன். 2020 'மிஸ் தமிழ்நாட்டில்' 2வது ரன்னர் அப், மிஸ் சவுத் இந்தியாவில் 'மிஸ் போட்டோஜெனிக்' டைட்டில்கள் பெற்றேன். 'மிஸ் இந்தியா'விற்கும் தேர்வாகினேன் சில பிராஜெக்ட்கள் வந்ததால் அதனை தவறவிட்டேன்.
2 வெப் சீரிஸ், 3 படங்கள், 2 சீரியல்கள், தனியார் டிவி நிகழ்ச்சி, குறும்படங்கள் நடித்துள்ளேன். தற்போது பாண்டியன் ஸ்டோர்சில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.
இக்கதாபாத்திரத்தில் முல்லையாக நடிக்க மிகவும் பயந்தேன். மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அவர்கள் வீட்டுப் பெண்ணாக மாறிவிட்டேன். நடிகர் சிவகார்த்திகேயனுடன் படம் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை.
வங்கி வேலையை விட்டு நடிப்பு துறைக்கு செல்ல வேண்டும் என்றபோது பெற்றோர் விருப்பம் கொள்ளவில்லை. என்னுடைய முடிவில் அழுத்தமாக இருந்தேன். பல போராட்டங்களுக்கு பின் நான் இத்துறைக்கு வந்தேன். காலப்போக்கில் அவர்கள் என்னை புரிந்துகொண்டனர். பெற்றோர்களே உங்கள் குழந்தை மீது நம்பிக்கை வையுங்கள். அவர்கள் செல்லும் பாதை சரியானதாக இருக்கும் என நம்புங்கள். நிச்சயம் உங்களை பெருமைபடுத்துவர்.