புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
கடவுள் விநாயகரை தங்கள் இல்லத்திற்குள் இனிதே வரவேற்கும் பண்டிகையான விநாயகர் சதுர்த்திக்கு தமிழக மக்களின் இதயத்தில் ஒரு தனி இடம் எப்போதும் உண்டு. குடும்பங்கள் ஒன்று சேரும் இந்த திருநாளான செப்டம்பர் 10 முழுவதும், குடும்பத்தினர் அனைவரும் விரும்பும் வகையிலான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பவுள்ளது.
இந்த ஆண்டில் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'தலைவி' திரைப்படத்தின் திறமைமிக்க குழுவினருடன் காலை 8:30 மணிக்கு கொண்டாட்டங்கள் இனிதே துவங்குகின்றன. தொகுப்பாளினி கிகி உரையாடும் இந்த நிகழ்ச்சியில், திரைப்படத்தின் நாயகி கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி மற்றும் திரைப்படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜய் ஆகியோர் பங்கேற்று தங்கள் கருத்துக்களை பகிரவுள்ளனர்.
அடுத்ததாக காலை 9 மணிக்கு, சிபிராஜ், நந்திதா சுவேதா மற்றும் நாசர் நடித்த விறுவிறுப்புகள் நிறைந்த 'கபடதாரி' திரைப்படம் ஒளிபரப்பாகிறது. தனது வழக்கமான பணியால் சோர்ந்து போன போக்குவரத்து காவலரான சக்தியின் வாழ்க்கை, ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரின் இறந்த உடல் மிச்சங்களை எதிர்பாராமல் கண்டறிந்த பின்பு வேறு கோணத்தில் செல்வதே இத்திரைப்படத்தின் சுவாரஸ்யமான கதை. மர்மமான அந்த மரணங்கள் குறித்து கதாநாயகன் துப்பறியும் போது சந்திக்கும் இடையூறுகளும், எதிர்கொள்ளும் மனப்போராட்டங்களின் பயணமே இப்படத்தின் மையக்கருவாகும்.
திரைப்படங்களைத் தொடர்ந்து விவாத நிகழ்ச்சிகளை வழங்கவுள்ள ஜீ தமிழ், தமது நேயர்களுக்கு நண்பகல் 12 மணிக்கு 'தமிழா தமிழா' நிகழ்ச்சியையும், பிற்பகல் 2மணிக்கு 'ஹூ'ஸ் தி ஹீரோ' நிகழ்ச்சியையும் ஒளிபரப்பவுள்ளது. இரண்டு மணிநேர சிறப்பு நிகழ்ச்சியான தமிழா தமிழா ஸ்பெஷலில் பிரபலங்கள் தங்களது குழந்தைகளுடன் பங்கேற்கவுள்ளனர். நகரம் மற்றும் கிராமத்திலிருந்து பங்கேற்கும் போட்டியாளர்கள் களத்தில் மோதவிருக்கும் 'ஹூ'ஸ் தி ஹீரோ'கேளிக்கையான கேம் ஷோவினை ஆர்ஜே விஜய் தொகுத்து வழங்கவுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி தினத்தை குதூகலத்துடன் நிறைவு செய்யும் விதமாக மாலை 4 மணிக்கு உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஒளிபரப்பாகவுள்ள வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் 'கன்னி ராசி' நகைச்சுவை திரைப்படத்தை நேயர்கள் கண்டு மகிழலாம். ஒரு குடும்பம் மொத்தமும் சேர்ந்து தங்கள் குடும்பத்தின் இளைய வாரிசை காதலிக்க சம்மதிக்க வைக்க முயலும் இந்த சுவாரஸ்யமான நகைச்சுவை விருந்தில் விமல், வரலக்ஷ்மி சரத்குமார், பாண்டியராஜன் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
செப்டம்பர் 10 அன்று 'விநாயகர் சதுர்த்தி'யை ஜீ தமிழ் தொலைக்காட்சியுடன் கொண்டாடி மகிழுங்கள்.