லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
டிக்டாக் பிரபலமான ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டின் முன் நிற்பது போன்ற போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் பிக்பாஸ் புரோமோ வெளியாகி ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த அப்டேட்டை அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர். முன்னதாக ஐந்தவாது சீசனில் போட்டியாளர்கள் என ஒரு உத்தேச பட்டியல் இணையத்தில் வலம் வந்த நிலையில் சில பிரபலங்கள் தாங்கள் கலந்து கொள்ளவில்லை என விளக்கம் கொடுத்து வருகின்றனர்.
உத்தேச பட்டியலில் டிக்டாக் ஜிபி முத்துவின் பெயரும் இடம் பெற்றிருக்க, தற்போது அவர் பிக்பாஸ் வீட்டின் முன் நின்று போஸ் கொடுப்பது போன்ற ஒரு போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் இது போட்டோஷாப்பில் செய்யப்பட்டது போன்ற தோற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. உண்மையில் இவர் நிகழ்ச்சியில் பங்கேற்பதை மறைமுகமாக இப்படி தெரிவித்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த போட்டோவை பார்த்த நெட்டீசன்கள் உடனடியாக ஜிபி முத்துவுக்கு மீம்ஸை கிரியேட் செய்து கலாய்த்து வருகின்றனர். இருப்பினும் போட்டியாளர்களின் பட்டியல் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.