ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
டிவி ஒன்றில் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு மாஸ்டர் செப் என்கிற சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. 14 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த போட்டியில் வாரம் ஒரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்பட்டு வருகிறார். அந்த வகையில் கடந்த வார எபிசோடில் சசி எலிமினேட் ஆனார். விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி டிஆர்பி பட்டியலிலும் வெகுவிரைவில் நல்லதொரு இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் வாரந்தோறும் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்பார்கள் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நடிகை நிக்கி கல்ராணி அடுத்த எபிசோடுக்கான சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். நிக்கி கல்ராணி பெங்களூரில் சொந்தமாக ரெஸ்டராண்ட் பிசினஸ் செய்து வருகிறார். எனவே சமையல் நிகச்சியான மாஸ்டர் செபில் நிக்கி கல்ராணி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.