'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
விவேக் கடைசியாக தொகுத்து வழங்கிய LOL - எங்க சிரி பார்ப்போம் நிகழ்ச்சி, அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது. விவேக்குடன் மிர்சி சிவாவும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சதீஷ், பவர்ஸ்டார் சீனிவாசன், பிரேம்ஜி அமரன், ஆர்த்தி, குக் வித் கோமாளி புகழ், அபிஷேக், மாயா கிருஷ்ணன் உள்பட 10 போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.
இதில் கலந்து கொள்கிறவர்கள் 6 மணி நேரங்கள் தாங்கள் சிரிக்காமல் மற்றவர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பது தான் கான்செப்ட். இதன் இறுதி சுற்றுவரை களத்தில் நின்றவர்கள் அபிஷேக்கும், புகழும். இருவருமே டைட்டில் வின்னர்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் புகழ், அபிஷேக்கிற்கு 25 லட்சம் கிடைத்தது.