மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு? | பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம்? | ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம் | தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” |
'பூவே உனக்காக' சீரியலில் நாயகியாக பூவரசி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ராதிகா ப்ரீத்தி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு வெளிவந்த 'ராஜா லவ்ஸ் ராதே' என்கிற கன்னட பத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பின் 'எம்பிரான்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிலும் காலடி எடுத்து வைத்தார். ஆனால் அதன்பின் எதிர்பார்த்த அளவில் பட வாய்ப்புகள் அமையவில்லை.
இந்நிலையில் சீரியல் வாய்ப்பு கிடைக்கவே அதே சரியாக பயன்படுத்திக் கொண்ட ராதிகா, தற்போது சின்னத்திரை ரசிகர்களின் மனங்களை கவர்ந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள், ரீல்ஸ் என எதையாவது அப்டேட் செய்து கொண்டிருக்கும் ராதிகா ப்ரீத்தி, தற்போது முதல் முறையாக புரொபஸனல் போட்டோஷூட்டிற்கு போஸ் கொடுத்துள்ளார். இதை பார்க்கும் ரசிகர்கள் 'க்யூட்ன்ஸ் ஓவர்லோடட்' என கமெண்ட் அடித்து வருகின்றனர்.