ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா |
விஜய் டிவிக்கு ஒரு டிடி போல் ஒரு காலத்தில் மற்றுமொரு டிவியின் முன்னனி விஜே வாக இருந்தவர் மகேஸ்வரி. திடீரென கேமராவிற்கு மொத்தமாக முழுக்கு போட்டுவிட்டு காணமால் போய்விட்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான 'புது கவிதை' தொடரின் மூலம் சின்னத்திரையில் மீண்டும் இடம்பிடித்தார்.
அதன்பின் சென்னை 28 படத்தின் இரண்டாவது பாகத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து சரியான வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் சீரியல் மற்றும் சினிமாக்களில் மீண்டும் இவரை காண முடியவில்லை. சமீபகாலமாக கவர்ச்சியான போட்டோஷூட் எடுத்து அதை சமூகவலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இப்போதும் இன்ஸ்டாகிராமில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை மிரள விட்டு வருகிறார்.