23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய சூர்யா | தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' | சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை |
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அசீம் டைட்டில் பட்டம் வென்றதை மக்கள் பலரும் விரும்பவில்லை. பிக்பாஸ் குழு மற்றும் கமல்ஹாசன் மீது தொடர்ந்து வருத்தம் தெரிவித்து வருகின்றனர். ரெட்கார்டு போட்டு வெளியேற்றப்பட வேண்டியவருக்கு டைட்டில் வின்னர் பட்டமா? என்றும் கொந்தளித்து வருகின்றனர். இந்நிலையில், அசீமின் வெற்றியை சக ஹவுஸ்மேட்டுகள் சிலர் கொண்டாடி வருகின்றனர், சிலர் விமர்சிக்காமல் கடந்து செல்கின்றனர். ஆனால், இந்த சீசனின் முக்கிய போட்டியாளரான மகேஸ்வரி அசீமின் இந்த வெற்றியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பதிவில், 'அசீம் ஜெயித்தது தவறான முன் உதாரணம்' என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஒரு பத்திரிகையின் கட்டுரையை பகிர்ந்து அதை முதலில் காண்பிக்கும் படி பின் செய்து வைத்துள்ளார். மற்ற ஹவுஸ்மேட்டுகள் அசீமின் இந்த வெற்றியை குறித்து மவுனம் காத்துவரும் நிலையில், மகேஸ்வரி தைரியமாக தனது கருத்தை பதிவிட்டுள்ளதால் அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.