இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
வீஜே மகேஸ்வரி விவாகரத்துக்கு பின் கணவரை பிரிந்து தன் மகனுடன் வாழ்ந்து வருகிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு சின்னத்திரை, சினிமாக்களில் ரீ-என்ட்ரி கொடுத்து நடித்து வரும் மகேஸ்வரி அண்மையில் நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 6லும் பங்கேற்று விளையாடினார். பிக்பாஸ் 6 முடிவுக்கு வந்த நிலையில் அசீமின் வெற்றி குறித்து விமர்சித்திருந்த அவர் தொடர்ந்து விக்ரமனுடனும் நட்பாக பழகி வருகிறார். அசீமின் வெற்றியை விமர்சிப்பதால் கடுப்பான அவரது ஆதரவாளர்கள் மகேஸ்வரி குறித்தும் அவருடைய மகன் குறித்தும் தரக்குறைவான கருத்துகளை சோஷியல் மீடியாவில் பேசி வந்தனர்.
இந்நிலையில் இதற்கு ரியாக்ட் செய்துள்ள மகேஸ்வரி தனது டுவிட்டரில், 'ஒரு போராளியாக இருக்கிறாய் மகனே நன்றி!. நச்சு ஆணாதிக்கம் நிறைந்த இந்த உலகத்தை நீ பெண்களுக்கான சிறந்த உலகமாய் மாற்றுவாய் என நம்புகிறேன். உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன். அம்மா உன்னை பாதுகாப்பேன்' என பதிவிட்டுள்ளார். மேலும், அந்த பதிவில் 'புகார் பதிவு செய்யப்பட்டுவிட்டது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும் குறிப்பிட்டுள்ளார். மகேஸ்வரியின் விமர்சனத்திற்கு அவரது தனிப்பட்ட வாழ்க்கையை இழுத்திருக்கக் கூடாது என்று அசீமின் ஆதரவாளர்களை பலரும் தற்போது கண்டித்து வருகின்றனர்.