சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
தொலைக்காட்சி நடிகை நேஹா மேனன், தன்னை பாடி ஷேமிங் செய்த எட்டாயிரம் பேரை இன்ஸ்டாகிராமில் ப்ளாக் செய்துள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நேஹா மேனன் தற்போது விஜய் டிவியின் பாக்கியலெட்சுமி சீரியலில் இனியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து வந்த நேஹா இன்ஸ்டாகிராமிலும் பிரபலமான நபராக வலம் வருகிறார். இதற்கிடையில் இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிடும் புகைப்படங்களில், அவர் குண்டாக இருப்பதை சிலர் கேலி செய்து வந்துள்ளனர். அதற்கு அவர் பதிலடியும் கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேஹா மேனன் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “இன்ஸ்டாகிராம் பயன்படுத்திய பிறகுதான் உருவ கேலி என்கிற விஷயம் எனக்குத் தெரிய வந்தது. ஒவ்வொரு கமென்ட்டை பார்க்கும்போதும் ஆரம்பத்தில் மிகவும் வேதனை அடைந்தேன். அம்மாவிடம் தான் என் வேதனைகளைக் கொட்டுவேன். எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது என் அம்மா தான். நம்மைப் பற்றி கமெண்ட் செய்பவர்களுக்கு நாம் எதனால் எடை போட்டோம், அதனால் என்னென்ன பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறோம் என்பதெல்லாம் தெரியாது. ஏதாவது நெகட்டிவ் கமென்டுகளை பார்த்தால், அவர்களுடைய கணக்கை பிளாக் செய்துவிடுவேன். அதுபோல கிட்டத்தட்ட 8000 கணக்குகளை பிளாக் செய்திருக்கிறேன். மெசேஜுகளை பார்த்து விட்டு அத்தனையையும் அழித்துவிடுவேன். இப்படி செய்தால் தான் எனக்கு நிம்மதியாக இருக்கும். அந்த அளவிற்கு மனஅழுத்தத்திற்கு சென்றேன். இதிலிருந்து மீண்டு வர ஒரு வருடம் ஆனது.” என கூறியுள்ளார்.