சின்னத்திரை நடிகையான ரேஷ்மா தனது அழகின் ரகசியம் பற்றி கூறியுள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியலில், ரேஷ்மா கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது கலர்ஸ் தமிழில் அபி டெய்லர் தொடரில் நடித்து வருகிறார். தனது குறும்பான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்த ரேஷ்மா, தற்போது தனது அழகுக்கான காரணம் குறித்த ரகசியத்தை வெளியிட்டுள்ளார்.
அதில், சிறு வயதிலிருந்தே தேங்காய் எண்ணெய் தேய்த்து குளிப்பது தான் எனது வழக்கம் . அதை தவிர பெரிதாக எதையும் செய்ததில்லை. ஆனால், இப்போது ஷூட்டிங் காரணமாக ஏரளமான சரும பிரச்னைகள் வருகின்றன. சருமத்தை பாதுகாக்கும் ரகசியத்தை இப்போது தான் கண்டுபிடித்தேன். சருமத்திற்கு முல்தானி மட்டி, தலைமுடிக்கு ஆட்டுப்பால் கலந்த தேங்காய் எண்ணெய். இதை நக்ஷ்த்திரா நாகேஷின் அம்மா எனக்கு தந்தார். டயட்டுக்கு இண்டர்மிட்டன்ட் மற்றும் கீட்டோ டயட்டுகள் ஒர்க் அவுட் ஆகிறது என்கிறார்.