ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட பாலாஜி 2வது இடத்தை பிடித்தார். ரியோ 3வது இடத்தை பிடித்தார். ஆனால் ஆரி வெற்றி பெற்றார்.
பிக் பாஸ் அனுபவம் குறித்து பாலாஜி கூறியிருப்பதாவது: மக்களிடமிருந்து இவ்வளவு அன்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. பிக்பாஸ் வீட்டுக்குள் நான் செல்லும் போது மக்களுக்கு என்னை தெரிய வேண்டும் என்றுதான் நினைத்து சென்றேன். நிகழ்ச்சியில் வெளியே வந்த பிறகு ஒரு மாடல் ஸ்டூடியோ ஆரம்பிக்க வேண்டும், அதற்காக நான் பணம் திரட்ட வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு அந்த வீடு எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்தது. இவ்வளவு அன்பை பெற்றதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். முரட்டு தனமாக நடந்து கொண்டதால் நிறைய பின்னடைவுகளை பெறுவேன் என்று நினைத்தேன். கல்லடி வரும் என்று நினைத்தேன். ஆனால் அன்பு அடிதான் வந்துள்ளது. பைனல் வரை செல்வேன் என்று எதிர்பார்க்கவில்லை. என்றார்.
பிக்பாஸ் அனுபவம் குறித்து ரியோ கூறியிருப்பதாவது : நான் இப்போது ரொம்ப நன்றாக இருக்கிறேன். பிக்பாஸ் எனக்கு ஒரு அழகான நல்லதொரு பயணமாக இருந்தது. நீங்கள் அனைவரும் எனக்குக் கொடுத்திருந்த ஆதரவு, வீடியோக்கள், புகைப்படங்கள் எல்லாம் பார்க்கும்போது சந்தோஷமாக இருந்தது. உங்களுடைய ஆதரவுக்கு நன்றி. அடுத்து நிறைய வேலைகள் உள்ளன. ஒவ்வொன்றாகத் திட்டமிட்டுப் பண்ணலாம். எனக்கு இவ்வளவு அன்பையும், ஆதரவையும் கொடுத்த அனைவருக்கும் நன்றி.
இவ்வாறு ரியோ தெரிவித்துள்ளார்.