ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

முன்னணி சேனல்களில் நட்சத்திர தொகுப்பாளியாக இருந்து பின்னர் சீரியல் நடிகை ஆனவர் நக்ஷத்திரா நாகேஷ். வாணி ராணி, லட்சுமி ஸ்டோர், ரோஜா, மின்னலே, நாயகி உள்பட பல தொடர்களில் நடித்தார். சில வெப் சீரிஸ்களிலும் நடித்தார். அவ்வப்போது சினிமாவிலும் நடித்து வந்தார்.
சேட்டை, வாயையை மூடி பேசவும், இரும்பு குதிரை, நம்பியார், இந்திரஜித், மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது வஞ்சகன் மற்றும் துல்கர் சல்மானுடன் ஒரு படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன் காதலரை தனது சமூக வலைத்தளத்தில் அறிமுகப்படுத்தினார். அவருடன் ரொமாண்டிக்காக இருக்கும் படங்களை வெளியிட்டு, அவரது பெயர் ராகவ் என்று தெரிவித்திருந்தார். இப்போது ராகவுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்த தகவலையும், படங்களையும் நக்ஷத்திரா வெளியிட்டுள்ளார். ஆனால் திருமண தேதி முடிவாகவில்லை என்று தெரிகிறது. இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.