லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
சின்னத்திரை நடிகை பவித்ரா ஜனனி விஜய் தொலைக்காட்சி சீரியல்களில் அதிகமாக நடித்திருக்கிறார். ஈரமான ரோஜாவே, தென்றல் வந்து என்னை தொடும் ஆகிய தொடர்களின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்த பவித்ராவுக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். அதே வரவேற்பும் ஆதரவும் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதும் இருந்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீரியல் நடிகைகள் பலர் அதன்பின் சினிமாவிற்கு சென்று விடுவார்கள். அதேபோல பவித்ராவும் சினிமாவில் என்ட்ரி கொடுப்பார் என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் ரஞ்சனி தொடரின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று தர்ஷனா, ஷ்யமந்தா, அஸ்வின், சந்தோஷ் ஆகியோருடம் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.
இதனால், அவர் ரஞ்சனி தொடரில் எண்ட்ரி கொடுக்கிறாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால், பிக்பாஸிலிருந்து வெளியே வந்த பவித்ரா இதுவரை எந்தவொரு ப்ராஜெக்டிலும் கமிட்டானதாக தெரியவில்லை. அதேசமயம் பவித்ராவின் தோழி ஷ்யாமந்தா கிரண் ரஞ்சனி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவரை காண பவித்ரா அங்கு சென்ற போது தான் சக நடிகர்களும் புகைப்படம் எடுத்துள்ளனர். தற்போது இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்களோ பவித்ராவை மீண்டும் சின்னத்திரையிலேயே நடிக்க சொல்லி ரிக்வஸ்ட் வைத்து வருகின்றனர்.