வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் |
விஜய் டிவி தொகுப்பாளினியான ஜாக்குலினிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு எப்போதும் உண்டு. சினிமா மற்றும் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமான இவர், தொடர்ந்து நடிக்கும் ஆசையில் சின்னத்திரையில் தோன்றுவதிலிருந்து கொஞ்சம் ப்ரேக் விட்டிருந்தார். ஆனால், பட வாய்ப்புகள் பெரிய அளவில் கிடைக்காததால் பிக்பாஸ் சீசன் 8 துவங்கிய போது முதல் ஆளாக துண்டு போட்டு வந்துவிட்டார். அதற்கேற்றார்போல் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஜாக்குலினுக்கு மக்களின் பேராதரவு கிடைத்தது. 15 முறை எலிமினேஷனுக்கு நாமினேட் ஆகி 15 முறையும் மக்களால் அதிக வாக்களிக்கப்பட்டு காப்பாற்ற பெற்ற ஒரே பிக்பாஸ் போட்டியாளர் என்ற சாதனையையும் ஜாக்குலின் படைத்துவிட்டார்.
ஒரு கட்டத்தில் டைட்டில் வின்னராகவோ, டாப் 3 இடத்திலோ ஜாக்குலின் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பணப்பெட்டி டாஸ்க்கின் போது அதிரடியாக வெளியேற்றப்பட்டார். இது ஜாக்குலின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் தந்தது. இந்நிலையில், பிக்பாஸ் கிராண்ட் பினாலேவின் ஜாக்குலினின் பயண வீடியோ ஒளிபரப்ப பட்டபோது நேயர்கள் அனைவரும் ஆர்ப்பரித்து வரவேற்றனர். ஜாக்குலினுக்காக பலர் அழுதனர். இதைபார்த்து எமோஷ்னல் ஆன ஜாக்குலின், மக்கள் தன் மீது வைத்திருக்கும் பாசத்திற்கு நன்றியினை தெரிவித்து தற்போது வீடியோ வெளியிட்டுள்ளார்.