துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
பிக்பாஸ் சீசன் 8 இறுதிகட்டத்தை எட்டிய நிலையில் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. பல போட்டியாளர்கள் அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ள சூழலில் தற்போது டப் போட்டியாளராக மக்களால் பெரிதும் விரும்ப பெற்ற மஞ்சரி எலிமினேட் ஆகி இருக்கிறார். இது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்து மிகவும் அருமையாக விளையாடி வந்த மஞ்சரிக்கு ஆரம்பம் முதலே பிக்பாஸ் கருணை காட்டவில்லை.
இதற்கிடையில் டாப் 5 போட்டியாளர்களில் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட அவர் தற்போது வெளியேறி இருக்கிறார். மஞ்சரி வெளியேறும் போது தன் மகனுக்காக டிராபியை உடைக்காமல் கொண்டு செல்ல பிக்பாஸிடம் அனுமதி கேட்டார். ஆனால், அதை பிக்பாஸ் மறுத்துவிடவே மஞ்சரி கணத்த இதயத்துடன் டிராபியை உடைத்துவிட்டு வெளியேறினார். இதனையடுத்து பிக்பாஸை விமர்சித்தும் கண்டித்தும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.