தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' | சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை | திரைகதையில் திருத்தம்: வா வாத்தியாருக்கு மறுபடப்பிடிப்பு | பிளாஷ்பேக் : அரசு விருது பெற்ற முதல் தமிழ் படம் | பிளாஷ்பேக்: மலேசிய வாசுதேவன் இயக்கிய ஒரே படம் | பிளாஷ்பேக் : இந்தியா முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோல்வி அடைந்த 'அப்னா தேஷ்' | ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? |
பிக்பாஸ் சீசன் 8ல் கலந்து கொண்டுள்ள அருண் பிரசாத்தும், பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னரான அர்ச்சனாவும் ஒருவரையொருவர் காதலித்து வருவதாக சில வருடங்களுக்கு முன் செய்திகள் வெளியானது. அதை இருவரும் மறுக்கவும் இல்லை. வெளிப்படையாக அறிவிக்கவும் இல்லை. இந்நிலையில், அர்ச்சனா தற்போது சீரியலிலிருந்து சினிமா வெப்சீரிஸ் என பிசியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் அண்மையில் அளித்த பேட்டியில் அருண் பிரசாத் தனக்கு நல்ல நண்பர் என கூறியிருந்தார்.
அதனை தொடர்ந்து எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவிலும், 'மற்ற நண்பர்களை போல தான் அருணையும் ஆதரிக்கிறேன்' என்று குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து அர்ச்சனா அருண் பிரசாத்துடனான தனது காதலை முறித்துக்கொண்டார் என செய்திகள் வெளியானது.
தற்போது அதற்கு பதிலளித்துள்ள அர்ச்சனா, 'அருண் தான் என் உலகம். எங்கள் உறவில் எந்த விரிசலும் இல்லை. உலகமே அவரை எதிர்த்தாலும் அவருக்காக நான் இருப்பேன். யு-டியூப் சேனல்கள் பொய் செய்திகளை பரப்ப வேண்டாம்' என மீண்டும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் மாற்றி மாற்றி பேசுவது அர்ச்சனா தான் என வசை பாடுகின்றனர்.