லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
சினிமாவில் குரூப் டான்ஸராக இருந்தவர் ஹேமா தயாள். ஆனால், ஒரே ஒரு ஸ்டெப்பின் மூலம் ஹீரோயின்களை ஓரம் கட்டி கவனம் ஈர்த்த இவருக்கு இன்று ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இதனை தொடர்ந்து சீரியலுக்குள் நடிகையாக என்ட்ரி கொடுத்த ஹேமா தயாள் எதிர்நீச்சல் உள்ளிட்ட சில ஹிட் தொடர்களில் முக்கிய ரோல்களில் நடித்திருந்தார். இவருக்கெல்லாம் சினிமா வாய்ப்பு கிடைக்காத என ரசிகர்களே ஏங்கி தவித்துக் கொண்டிருக்க தற்போது சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள கங்குவா படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த காட்சிகளின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஹேமா தயாள் மேன்மேலும் வளர வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.