சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தமிழ் சின்னத்திரையில் கண்ணான கண்ணே சீரியல் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை நிமிஷிகா. இந்த தொடருக்கு பின் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைத்தாலும் எந்தவொரு சீரியலிலும் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்த நிமிஷிகா, கார்த்திக் வாசுவுக்கு ஜோடியாக புனிதா என்கிற புதிய சீரியலில் தற்போது நடித்து வருகிறார்.
அவர் அண்மையில் அளித்த ஒரு பேட்டியில், 'சினிமாவில் மட்டுமல்ல சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்னை இருக்கிறது. அதுவும் ஹீரோயின்களை விட துணை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகளிடம் தான் அதிகம் அட்ஜெஸ்ட்மென்டுக்கு கேட்கப்படுகிறது. இது சில சமயங்களில் அந்த சீரியலின் இயக்குனர்களுக்கே தெரியாமல் நடக்கிறது' என்று கூறியுள்ளார். மேலும் இது போல பெண்களை கார்னர் செய்து அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்கும் ஆண்களுக்கும், அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு ஓகே சொல்லும் பெண்களுக்கும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் அந்த பேட்டியில் நிமிஷிகா பேசியுள்ளார்.