காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து பிரபலமாகியுள்ள சுஜிதா, அண்மையில் ஹோம் டூர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், இரண்டு ஏர் ரைபிள் ரக துப்பாக்கிகள் காண்பிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து இணையதளங்களில் பல சர்ச்சைகள் எழுந்த நிலையில் சுஜிதா தனுஷ் விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 'நீலகிரி சுற்றுலா சென்றபோது என் நண்பர் வீடு மருதமலை அடிவாரத்தில் இருந்தது. அவரது வீடு அழகாக இருந்ததால் ஹோம் டூர் வீடியோ எடுக்க அனுமதி கேட்டேன். அந்த வீடியோவில் அவர்கள் வீட்டிலிருந்த தூப்பாக்கிகளுக்கு லைசன்ஸ் தேவையில்லை என்று கூறியிருந்தேன். அதுதான் தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது. அவர்கள் சட்டத்துக்கு புறம்பாக எதுவும் செய்யவில்லை. வனத்துறையில் இருந்து அவர்களை எந்த கேள்வியும் கேட்கவில்லை. அதனால் இதெல்லாம் தேவையில்லாத வேலை' என அந்த வீடியோவில் சுஜிதா தனுஷ் விளக்கம் கூறியுள்ளார்.