காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் பொறுப்பான மூத்த மருமகளாக தனம் என்கிற கதாபாத்திரத்தில் சூப்பராக ஸ்கோர் செய்திருந்தார் சுஜிதா. முதல் பாகம் நிறைவுற்று இரண்டாவது பாகத்திலும் சுஜிதாவை நடிக்க வைக்க சேனல் தரப்பிலிருந்து கடுமையாக முயற்சித்தனர். ஆனால், சுஜிதா நடிக்க சம்மதிக்கவில்லை. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வில் ஏன் நடிக்கவில்லை என்ற கேள்விக்கு சுஜிதா தற்போது பதிலளித்துள்ளார்.
அதில், 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் திருமணமான பெண்ணுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்று கதை இருந்தது. இதனால் நான் நடிக்க விரும்பவில்லை. சேனல் தரப்பிலிருந்து கதையை மாற்றிக் கொள்கிறோம் என்று கூட சொன்னார்கள். ஆனால், ஒரே மாதிரி கதையில் 5 வருடங்கள் நடித்தாகிவிட்டது. மீண்டும் அதேபோன்றதொரு கதையில் நடிக்க வேண்டாம் என்று தான் மறுத்துவிட்டேன்' என்று கூறியிருக்கிறார்.