மீண்டும் தனுஷ் உடன் படம்: உறுதிப்படுத்திய வெற்றிமாறன் | ‛தனி ஒருவன் 2' எப்போது வரும்?: இயக்குனர், தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்! | நகைச்சுவை நாயகனா? கதாநாயகனா? மக்களே கூறட்டும்; நடிகர் சூரி | ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் பட ரிலீஸ் எப்போது? | எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் |
சினிமாவில் சிறு சிறு ரோல்களில் நடித்து வந்த நடிகை ஜூலி, சின்னத்திரையில் சத்யா, சித்திரம் பேசுதடி ஆகிய தொடர்களில் மூலம் பிரபலமானார். இவருக்கு திருமணமாகி 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் குழந்தை இல்லாமல் மிகவும் வேதனைப்பட்டு வந்தார். 42 வயதான ஜூலிக்கு இரண்டு முறை அபார்ஷன் ஆகியிருக்கிறது. இப்படி பலவாறாக கஷ்டங்களை அனுபவித்த ஜூலி சென்ற வருட இறுதியில் கருவுற்றார். அவரது வளைகாப்பு நிகழ்வு அண்மையில் கோலாகலமாக முடிந்தது. இந்நிலையில் ஜூலை 25 ஆம் தேதி அவருக்கு அழகிய இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை ஜூலி இன்ஸ்டாகிராமில் பதிவிட பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.