பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் | எனக்கு என்ன ஆச்சு ? நஸ்ரியா தன்னிலை விளக்கம் | பிரபாஸ் படப்பிடிப்பில் மிதுன் சக்கரவர்த்திக்கு ஏற்பட்ட கைமுறிவு | கொச்சியில் புது வீடு கட்டினார் நிமிஷா சஜயன் | 'கூலி, 45' ; ஒரேநாளில் வெளியாகும் உபேந்திராவின் 2 படங்கள் | நடிகை ஜனனி திருமண நிச்சயதார்த்தம் ; விமான பைலட்டை மணக்கிறார் |
வெள்ளித்திரை நடிகையான டெல்னா டேவிஸ் தமிழ் சினிமாவில் குரங்கு பொம்மை படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். ஆனாலும், அதன்பிறகு திரைப்படங்கள் எதிலும் அவர் நடிக்கவில்லை. பிறகு டிவியில் அன்பே வா தொடரில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தார். அந்த சமயம் அவர் அளித்த பேட்டியில் சினிமாவில் நடிப்பதை விட சீரியலில் நடிப்பது தனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. சினிமாவில் தொடர்ந்து நடிக்க விருப்பமில்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில், அன்பே வா சீரியலிலிருந்து விலகிய டெல்னா டேவிஸ் தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு 'லவ் இங்' என்ற படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். அந்த மகிழ்ச்சியினை இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.