இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

அரண்மனைக்கிளி, திருமகள் ஆகிய தொடர்களின் மூலம் பிரபலமானார் நடிகை சங்கீதா வெங்கடேசன். சீரியல் மட்டுமில்லாமல் மாஸ்டர், சுல்தான், பாரீஸ் ஜெயராஜ் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர் ரெட்டின் கிங்க்ஸிலியை திருமணம் செய்து கொண்ட சங்கீதா வெளிநாட்டு டூர், ஹனிமூன் என ஜாலியாக வலம் வருகிறார்.
அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், 'அப்பா இறந்த போது அவருக்கு நெஞ்சு வலி இருந்தது. நானும் அம்மாவும் வெளியில் கிளம்பும் போது தண்ணீர் பாட்டில் பேக் எடுத்து கொடுத்து டாடா காட்டி வழி அனுப்பி வைத்தார். நாங்கள் செல்லும் போது புது கார் பிரச்னை செய்தது. உடனே வீட்டிற்கு திரும்பி வேறு கார் எடுத்து சென்றோம். நாங்கள் வெளியே போகாமல் இருக்கக் கூட இப்படி ஆகிருக்கலாம். அதன்பிறகு தான் அப்பாவிற்கு வலி அதிகமாகியுள்ளது. நாங்கள் வீட்டிற்கு வருவதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. என் திருமணத்திற்கு அப்பா இல்லாதது மிகவும் வருத்தமாக இருந்தது' என உருக்கமாக பேசியுள்ளார்.