ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
விஜய் டிவியின் ஹிட் தொடரான பாக்கியலெட்சுமி் சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் வீஜே விஷால். இந்த கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிக அன்பையும் பெற்று வந்த வீஜே விஷால் திடீரென அந்த சீரியலை விட்டு விலகியுள்ளார். அவருக்கு பதிலாக நடிகர் நவீன், எழில் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விஷால் எதற்காக விலகினார் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கு பாக்கியலெட்சுமி தொடரில் சமீப காலங்களில் எழில் கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டதே விஷால் விலகியதற்கான காரணம் என சின்னத்திரை வட்டாரங்களில் செய்திகள் பரவி வருகிறது. இதற்கிடையில் விஷால் புதிய ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளராக கமிட்டாகியுள்ளதுடன், குக் வித் கோமாளி சீசன் 4லும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.