லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
சின்னத்திரையில் ஒருகாலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகர் வேணு அர்விந்த். இவர் நடிக்கிறார் என்றாலே அந்த சீரியலும் அவர் நடிக்கும் கதாபாத்திரமும் பெரிதாக பேசப்படும். ‛அலைகள்' என்ற தொடரில் இவர் நடித்த வில்லன் கதாபாத்திரத்தை யாராலும் மறக்கவே முடியாது. கொரோனா காலக்கட்டத்தில் இவருக்கு மூளையில் நடந்த அறுவை சிகிச்சை காரணமாக சில வருடங்களாக கோமாவில் இருந்தார். தற்போது பூரண நலம் பெற்று திரும்பி வந்துள்ள வேணு அர்விந்த் மீண்டும் ராதிகாவோடு ‛தாயம்மா குடும்பத்தார்' சீரியலில் நடித்து வருகிறார்.
அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில், அலைகள் சீரியலில் தான் மிகவும் கொடூரமாக நடித்திருந்ததாகவும் அப்போது பெண்கள் பலரும் என்னை பார்க்கும் போது மண்ணை வாரி தூற்றினார்கள். அதனால் கூட தனக்கு இப்படி ஆகியிருக்கலாம் என்றும் கூறினார். மேலும், அந்த கதாபாத்திரத்திற்கு பின் சீரியலில் வில்லன் மற்றும் வில்லி கதாபாத்திரங்கள் அதிகமாகிவிட்டதாகவும் அதனால் தனக்கு மிகவும் குற்ற உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் வருத்தத்துடன் பேசியுள்ளார்.