லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
தமிழ் சின்னத்திரைக்கு நந்தினி சீரியல் மூலம் ஹீரோவாக அறிமுகமான ராகுல் ரவி, கண்ணானே கண்ணே என்கிற ஹிட் தொடரில் நடித்து பிரபலமானார். கடந்த 2020 ஆம் ஆண்டு காதலி லெட்சுமி நாயரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களிலேயே பிரிந்தார். இந்நிலையில், லெட்சுமி நாயர் தன் கணவர் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக புகார் அளித்திருந்தார். இது தொடர்பில் ராகுல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து ராகுல் ரவி தலைமறைவானார். மேலும், இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் ராகுல் அளித்த மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது உச்சநீதிமன்றம் தலைமறைவாக இருக்கும் ராகுல் ரவிக்கு முன் ஜாமின் வழங்கியுள்ளது.