அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு பிரபலங்கள் பலரும் அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் விஜய் டிவி புகழ் ஏற்கனவே விஜயகாந்த் மறைவின் போது அஞ்சலி செலுத்தியிருந்தாலும், அண்மையில் அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த புகழ், 'கேப்டன் நிறைய பேருக்கு உதவி செய்திருக்கிறார். சாப்பாடு போடுவார் என்று பலரும் சொல்வார்கள். அவருக்காக நான் என்ன செய்யலாம் என்று நினைத்தேன். எனவே, என்னுடைய ஆபிஸில் தினமும் 50 பேருக்கு சாப்பாடு போட முடிவு செய்திருக்கிறேன். என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன். இதற்காக கேப்டனிடம் ஆசிர்வாதம் வாங்கவே இங்கு வந்தேன்' என்று கூறியுள்ளார். புகழின் இந்த செயலுக்கு சோஷியல் மீடியாவில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.