4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் |

ரோஜா தொடரில் நடித்து சின்னத்திரை நேயர்கள் மனதில் நிரந்தர இடத்தை பிடித்துள்ளார் பிரியங்கா நல்காரி. ரோஜா சீரியல் முடிவடைந்த பிறகு ஜீ தமிழில் சீதா ராமன் என்ற சீரியலில் நடிக்க ஆரம்பித்த போது, காதலர் ராகுல் வர்மாவை திடீரென திருமணம் செய்து கொண்டார். இதனால், சில வாரங்களிலேயே அந்த சீரியலை விட்டு விலகினர். இந்நிலையில், பிரியங்கா நல்காரி தற்போது அதே தொலைக்காட்சியில் நளதமயந்தி என்ற சீரியலில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்துள்ளார். அத்துடன் தனது கணவர் ராகுல் வர்மாவுடன் சேர்ந்து புதியதாக ரெஸ்டாரண்ட் ஒன்று தொடங்கி இருக்கிறார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரியங்காவுக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.




