குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை |
பூவே உனக்காக தொடரில் ராதிகா ப்ரீத்தி ஹீரோயினாக நடித்து வந்தார். சீரியல் நன்றாக சென்று கொண்டிருந்த நேரத்தில் ராதிகா ப்ரீத்தி திடீரென விலகினார். இதற்கு அசீம் தான் காரணம் என்று சக நடிகர்கள் பலரும் பேட்டி கொடுத்து வந்தனர். இந்நிலையில், அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய ராதிகா ப்ரீத்தி இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.
அவர் கூறுகையில், 'அசீமுக்கும் எனக்கும் பலமுறை ஷூட்டிங் ஸ்பாட்டில் சண்டை வந்துள்ளது. அதை மறுநிமிஷமே மறுந்துவிடுவோம். அசீம் எனக்கு நண்பனும் கிடையாது, எதிரியும் கிடையாது. ஆனால், எங்கள் முதுகுக்கு பின்னால் எங்களை தவறாக பேசினார்கள்' என கூறியுள்ளார்.
மேலும், சீரியலை விட்டு விலகியதற்கான காரணங்களை அடுக்கிய அவர், 'ஒன்றரை வருடம் சம்பளமில்லாமல் நடித்தேன். உடல் அளவிலும் பிரச்னை இருந்தது. ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் டாய்லட் வசதி செய்து தரவில்லை. அங்கிருக்கும் வீடுகளில் ரிக்வஸ்ட் செய்து தான் டாய்லட் பயன்படுத்தினோம்' என இதுபோல் பல கொடுமைகளை சீரியலில் நடிக்கும் போது அனுபவித்ததாக ராதிகா ப்ரீத்தி கூறியுள்ளார்.