பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் |

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ரச்சிதாவும், ஷிவினும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். அதிலும், ஷிவினை தனது தங்கை என்று அழைத்து ரச்சிதா, பிக்பாஸ் வீட்டிலிருந்து ஷிவின் வெளியே வந்த போது மிகப்பெரிய வரவேற்புடன் ஊர்வலமே நடத்தினார். இந்நிலையில், ஷிவினின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய ரச்சிதா, 'என் பாப்பாவின் பிறந்தநாள்' என இன்ஸ்டாகிராமில் நேற்று, (செப்டம்பர் 22) வீடியோ வெளியிட்டுள்ளார். இவர்களது நட்பை பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்த ரசிகர்கள் இருவரை பாராட்டியும், ஷிவினின் பிறந்தநாளுக்கு அவருக்கு வாழ்த்துகளையும் குவித்து வருகின்றனர்.