ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' |
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே தொடர் முதல் சீசனின் அமோக வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரை ஆரம்பத்தில் இயக்குநர் தாய் செல்வம் இயக்கி வந்தார். ஆனால், உடல்நலக்குறைவு காரணமாக அவர் கடந்த 2022 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இதனையடுத்து இந்த தொடரை சுந்தரம் என்பவர் இயக்கி வந்தார். இந்நிலையில், அவரும் தற்போது ஈரமான ரோஜாவே 2 சீரியலிலிருந்து விலகிவிட்டார். இதனை சுந்தரம் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்து சீரியல் குழுவுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். அக்டோபர் 2 ஆம் தேதி முதல் ஈரமான ரோஜாவே தொடரை புதிய இயக்குநர் இயக்கவிருக்கிறார். அவரை பற்றிய தகவல்கள் விரைவில் தெரியவரும்.