அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் 5 வருடங்களுக்கும் மேலாக ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது. இதில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த பெரும்பாலான நடிகர்கள் இப்போது மாறிவிட்டனர். ஆனால், முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா தனுஷ், இதுவரை சீரியலை விட்டு விலகவில்லை. அவர் தான் சீரியலுக்கு ஒரு முக்கிய ப்ளாஸாக உள்ளார்.
இந்நிலையில், அவருக்கு பல மாதங்களாக சம்பள பாக்கி வைத்ததன் காரணமாக சீரியலை விட்டு விலகுவதாக அண்மையில் முடிவெடுத்துள்ளார். இதனையறிந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் தயாரிப்பு தரப்பினர், சுஜிதா விலகினால் சீரியல் நன்றாகவே இருக்காது என்ற முடிவுக்கு வந்துள்ளனர். எனவே, அவர்கள் சுஜிதாவிடம் சமாதானம் பேசி இதுவரை பேசப்பட்ட சம்பளத்தை விடவும் அதிக தொகையை சம்பளமாக தருவதாக கூறியுள்ளனர். இதனையடுத்து சீரியலை விட்டு விலகும் முடிவை சுஜிதா கைவிட்டுவிட்டதாக சின்னத்திரை வட்டாரங்களில் செய்திகள் பரவி வருகிறது.