அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா கதாபாத்திரத்தில் வெங்கட் ரங்கநாதன் நடித்து வருகிறார். இவர் அண்மையில் புதிதாக ஒளிபரப்பாக ஆரம்பித்துள்ள கிழக்கு வாசல் தொடரில் ஹீரோவாக கமிட்டாகி நடித்து வரும் நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை விட்டு விலகிவிட்டதாக செய்திகள் வலம் வந்தது. இந்நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனாவாக நடித்து வரும் ஹேமா தனது இன்ஸ்டாவில் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து 'புது ஜீவாவா?' என கேள்வி கேட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் வெங்கட் விலகிவிட்டாரா என அதிர்ந்து போயினர். ஆனால், அந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை என்றும், வெங்கட் தான் தற்போது வரை ஜீவாவாக நடிக்கிறார் என்றும் சின்னத்திரை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளனர். விளையாட்டுத்தனம் கொண்ட ஹேமா வழக்கம் போல் இந்த பதிவிலும் ரசிகர்களை ஏமாற்றி விளையாடி இருக்கிறார் என கூறியுள்ளனர்.