அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
விஜய் டிவி தொடர்ந்து பல புதுமையான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது 'கதாநாயகி' என்ற நிகழ்ச்சியை தொடங்கி உள்ளது. இது திரைப்படத்திற்கு கதாநாகியை தேர்வு செய்யும் நிகழ்ச்சியாகும். இதற்காக கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் முதல்கட்ட தேர்வு நடந்தது. நடிக்க ஆர்முள்ள பெண்கள் இதில் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினார்கள். அவர்களில் இருந்து 8 பேர் தேர்வு செய்யப்பட்டு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்கள்.
அவர்களுக்கு பாடும் திறன், ஆடும் திறன், நடிப்பு திறன் வெளிப்படுத்தும் வகையிலான சுற்றுகள் நடத்தப்பட்டு அதற்கு மதிப்பெண் வழங்கப்படும். இதன் முடிவில் அதிக மதிப்பெண் பெற்று தேர்வாகிறவர்கள் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்படுவார்கள். அவரை கே.எஸ்.ரவிகுமார் தனது படத்தில் அறிமுகப்படுத்துவார். வேறு இயக்குனர்கள் வாய்ப்பு கொடுக்க முன்வந்தால் அவர்களுக்கும் முன்னுரிமை கொடுக்க இருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியை ராதிகா சரத்குமார், கே.எஸ்.ரவிகுமார் நடுவர்களாக இருந்து நடத்துகிறார்கள். கலக்கப்போவது யார் புகழ் குரேஷி தொகுத்து வழங்குகிறார். கடந்த 29ம் தேதி தொடங்கியுள்ள இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.