தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' | சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை | திரைகதையில் திருத்தம்: வா வாத்தியாருக்கு மறுபடப்பிடிப்பு | பிளாஷ்பேக் : அரசு விருது பெற்ற முதல் தமிழ் படம் | பிளாஷ்பேக்: மலேசிய வாசுதேவன் இயக்கிய ஒரே படம் | பிளாஷ்பேக் : இந்தியா முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோல்வி அடைந்த 'அப்னா தேஷ்' | ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? |
90-கள் காலக்கட்டத்தில் செய்திவாசிப்பாளராகவும், திரைவிமர்சனம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் பிரபலமானவர் ரத்னா சிவராமன். இவருடைய தமிழ் உச்சரிப்புக்கும் அழகான தோற்றத்துக்கும் இப்போதும் ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். இந்த தலைமுறைக்கு ஏற்றார்போல் அப்டேட்டாகியுள்ள ரத்னாவுக்கு சோஷியல் மீடியாக்களிலும் அதிக பாலோயர்கள் உள்ளனர். அண்மையில் ரத்னா அவரது பேஸ்புக்கில் அவரது பழைய புகைப்படம் ஒன்றை த்ரோபேக் புகைப்படமாக பகிர்ந்து, அந்த புகைப்படத்திற்கு பின்னால் நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
போட்டோவில் இருக்கும் அதே புடவையில் 1995ம் ஆண்டு ஸ்டூடியோவில் சூட்டிங்கை முடித்துக் கொண்டு ரத்னா வீடு திரும்பி கொண்டிருந்தாராம். அப்போது 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன் தன்னை சிக்னலில் மறித்து, 'நீங்க தானே செய்தி வாசிப்பாளர் ரத்னா. உங்கள திருமணம் செஞ்சிக்க ஆசைபடுறேன் உங்கள் பதில் என்ன' என்று கேட்டாராம். இதனால் வெலவெலத்து போன ரத்னா 'சாரி நோ சான்ஸ். ஐ எம் மேரீட்' என்று பதிலளித்திருக்கிறார். ஆனாலும், விடாத அந்த நபர் 'உங்களுக்கு தங்கச்சி இருக்கா சொல்லுங்க கல்யாணம் பண்ணிக்கிறேன்' என்று கேட்க, ஆள விட்டா போதும் என ரத்னா அங்கிருந்து எஸ்கேப் ஆகி சென்றிருக்கிறார்.
தற்போது இந்த புகைப்படத்தை பார்க்கும் போது தனக்கு அந்த நகைச்சுவையான நிகழ்வும், அந்த இளைஞனும் ஞாபகத்துக்கு வந்ததாக அந்த பதிவில் ரத்னா பதிவிட்டுள்ளார்.