2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் |
சீரியல் நடிகை நக்ஷத்திராவுக்கு அண்மையில் தான் அழகான பெண் குழந்தை பிறந்தது. நக்ஷத்திரா டைரி என்ற பெயரில் யு-டியூப் சேனல் வைத்திருக்கும் அவர் தனது வாழ்க்கையில் முக்கியமான தருணங்களை அதில் பதிவேற்றி வருகிறார். அந்த வகையில் பிரசவத்துக்கு முன் மருத்துவமனையில் இருக்கும் போது மேக்கப் போட்ட வீடியோவை நக்ஷத்திரா பகிர்ந்துள்ளார். அதில், நக்ஷத்திரா மேக்கப் போட்டுக் கொண்டிருக்க, அவரது அம்மா, 'ஆபரேஷன் தியேட்டருக்கு போகப் போற என்ன மேக்கப் வேண்டி கிடக்கு?' என்று கேட்கிறார். அதற்கு நக்ஷத்திரா, 'என் குழந்தை என்ன முதன்முதலா பார்க்கும் போது நான் அழகா இருக்க வேண்டாமா' என கேட்டுக் கொண்டே கணவரிடம் லிப் பாம் கேட்டு வாங்கி உதட்டில் போடுகிறார். அதை நக்ஷத்திராவின் கணவரும் அவரது அம்மாவும் சிரித்துக் கொண்டே எஞ்சாய் செய்கின்றனர். இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வரும் நிலையில் ரசிகர்களும் கிண்டலாக 'நக்ஷத்திரா இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியல' என கலாய்த்து வருகின்றனர்.