சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' | பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம் | பிளாஷ்பேக்: தம்பியை இயக்குனராக்கி அழகு பார்த்த அக்கா | மம்முட்டி பட இயக்குனருக்கு வெற்றியை தருவாரா சவுபின் சாஹிர் ? | 10 நாள் அவகாசத்துடன் மீண்டும் ஆரம்பமான கன்னட பிக்பாஸ் 12 | விஜய்க்கு பவன் கல்யாண் ஆலோசனை சொன்னாரா? |
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பாடகியாக அறிமுகமானவர் சிவாங்கி. ஆனால், இவர் அதிகம் பிரபலமானது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான். குக் வித் கோமாளியின் முதல் மூன்று சீசன்களில் கோமாளியாக வந்து அசத்திய சிவாங்கி 4வது சீசனில் போட்டியாளராக என்ட்ரி கொடுத்து சமையல் செய்து அசத்தி வருகிறார். இதனாலேயே சிவாங்கிக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. ஆனால், என்ன காரணத்தினாலோ இந்த சீசனுக்கு பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கே வர மாட்டேன் என்று சிவாங்கி கூறிவிட்டார்.
அதனை உறுதிப்படுத்தும் வகையில் கடைசி நாள் சூட்டிங்கின் போது குக் வித் கோமாளி செட்டில் வைத்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, '4 வருடம். நிறைய நினைவுகள், கனவு தருணங்கள். இது மிகவும் கஷ்டமான குட் பை' என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து சிவாங்கியின் ரசிகர்கள் சிவாங்கி இல்லாமல் குக் வித் கோமாளியா? என ஆதங்கத்துடன் அவரை தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்களில் கலந்து கொள்ளும் படி வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.