ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
எதிர்நீச்சல் தொடரில் ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு நடித்து வருகிறார்கள். அந்த வகையில் வில்லன் குணசேகரனுக்கு எதிர் வில்லனாக எஸ்.கே.ஆர் என்ற கதாபாத்திரமும் கெத்தாக வலம் வருகிறது. குணசேகரனை போல் பக்கம் பக்கமாக டயலாக் பேசாவிட்டாலும் கெத்தான உடல் மொழியினாலேயே சிறப்பான நடிப்பை வெளிபடுத்தி வருகிறார் எஸ்.கே.ஆர். இந்த எஸ்கேஆர் யார்? இதற்கு முன்னால் இவரை சீரியலிலோ, சினிமாவிலோ பார்த்ததில்லையே என ரசிகர்கள் பலரும் ஆச்சரியமாக கேட்டு வந்தனர்.
இந்நிலையில், அவரை பற்றிய சுவாரசியமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. எதிர்நீச்சல் எஸ்கேஆரின் உண்மையான பெயர் வாசுதேவன். கேராளாவை சேர்ந்த இவர் நிஜத்திலும் பெரிய பிசினஸ் மேன் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சென்னையில் செட்டிலாகி இருக்கும் வாசுதேவனுக்கு நடிக்க வேண்டும் என்பது ஆசையாக இருந்துள்ளது. இதற்கிடையில் இயக்குநர் திருச்செல்வத்தின் அறிமுகம் கிடைக்க, தனது சீரியலுக்கு உங்களை போல் கதாபாத்திரம் வேண்டும் என்று வாசுதேவனிடம் கேட்டுள்ளார். வாசுதேவனும் தனது நடிக்கும் ஆர்வத்தை குறித்து திருசெல்வத்திடம் கூற, எஸ்கேஆர் கதாபாத்திரத்தில் கமிட்டாகி கலக்கி வருகிறார்.
எஸ்கேஆர் கதாபாத்திரத்தில் வாசுதேவனின் எதார்த்தமான நடிப்பு பலரையும் கவர்ந்துள்ள நிலையில் தமிழ் திரையுலகத்துக்கு நல்லதொரு குணச்சித்திர நடிகர் கிடைத்துவிட்டதாக பலரும் வாசுதேவனை பாராட்டி புகழ்ந்து வருகின்றனர்.