அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

சின்னத்திரை நடிகரான தீபக் பார்ப்பதற்கு இப்போதும் இளமையாக எனர்ஜிடிக்காகவும், பிட்டாகவும் இருந்து வருகிறார். நீண்ட இடைவேளைக்கு பின் சீரியலில் ‛தமிழும் சரஸ்வதியும்' தொடரின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் அவ்வபோது அப்டேட் வெளியிட்டு வரும் தீபக் தற்போது தனது குடும்பத்துடன் ரிஸ்க்கான யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதில், தீபக் தனது மனைவி ரஞ்சனி மற்றும் மகன் அக்னித்துடன் ரோப்பில் ஒன்றாக சேர்ந்து தொங்கியவாறு ரிஸ்க்கான யோகாசனங்களை செய்துள்ளார். ஒரு புகைப்படத்தில் ரஞ்சனி தலைகீழாகவும் மற்றொரு புகைப்படத்தில் தீபக் தலைகீழாகவும் யோகாசனம் செய்துகாட்டுகின்றனர். மூன்றாவது புகைப்படத்தில் தீபக் ரஞ்சனியுடன் அவரது மகனும் ஒரே ரோப்பில் தீபக்கின் தோள்களில் ஏறி உட்கார்ந்து யோகாசனம் செய்கிறார். இந்த புகைப்படங்களானது சோஷியல் மீடியாவில் வைரலாக தீபக் மற்றும் அவரது குடும்பத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.