இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தமிழ் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் தற்போது சிவன் சீனிவாசன் தலைவராகவும், போஸ் வெங்கட் செயலாளராகவும் இருந்து வரும் நிலையில், இவர்களின் நிர்வாகத்தின் பதவி காலம் முடிவடைவதையடுத்து, அதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஜூலை 22ம் தேதி துவங்கிய வேட்புமனு தாக்கலில், பலரும் போட்டியிட மனு சமர்பித்தனர். தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளைத் தவிர, இரண்டு துணைத் தலைவர்கள், நான்கு இணைச் செயலாளர்கள், பதினான்கு கமிட்டி உறுப்பினர்கள் என மொத்தம் 23 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
தினேஷ், பரத், சிவன் சீனிவாசன் ஆகிய மூன்று பேர் தலைமையில் மூன்று அணிகள் போட்டியிட சுயேட்சையாக தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார் ஆர்த்தி கணேஷ்கர். 23 பதவிகளுக்கு மூன்று அணிகளின் சார்பாக மொத்தம் 69 பேர் போட்டியிடுகின்றனர். சென்னை, விருகம்பாக்கத்தில் இன்று (ஆக.,10) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. சுமார் 2,000 உறுப்பினர்கள் ஓட்டளிக்கின்றனர். பெப்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் உமா சங்கர் பாபு, தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.