'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் | பிளாஷ்பேக்: தாமதத்தால் ஏற்பட்ட 4 பெரும் இழப்புகள் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' |
பிரபல நடிகை காஜல் பசுபதி தன்னை நம்ப வைத்து ஏமாற்றிய இயக்குநரை சோஷியல் மீடியாவில் அம்பலப்படுத்தி கிழித்தெடுத்துள்ளார். சினிமா மற்றும் சின்னத்திரையில் கிடைக்கும் வாய்ப்புகளில் காஜல் பசுபதி நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் அண்மையில் நடித்து முடித்த ஒரு ப்ராஜெக்ட்டில் காஜல் பசுபதிக்கு சம்பளத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர். அதை காஜல் கேட்டபோது அவரது பெயரை டேமேஜ் செய்யும் வகையில், காஜல் ஷூட்டிங் ஸ்பாட்டில் குடித்து விட்டு கலாட்டா செய்ததாக கூறியுள்ளனர். இதனால் கடுப்பான காஜல் பசுபதி தற்போது அந்த இயக்குநரை தனது சோஷியல் மீடியாக்களில் கிழித்தெடுத்து வருகிறார். 'பேய்மெண்ட் கொடுக்க வக்கு இல்லன்னா கூட விட்டுடலாம். ஆனா நான் பண்ணாத சொல்லி என் இமேஜ் ஸ்பாயில் பண்ணி என் கேரியர கெடுக்கு நினைக்கிற எச்ச!. வேலையில இருக்கும்போது நான் குடிச்சதா சரித்திரமே இல்லை' என குறிப்பிட்டு மிகவும் கோபத்துடன் தனது ஸ்டைலில் பல கெட்ட வார்த்தைகளை போட்டு திட்டியுள்ளார். மேலும், மற்றொரு பதிவில் தன்னை ஏமாற்றிய இயக்குநரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பதிவிட்டு அவரை அம்பலபடுத்தியுள்ளார்.