இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

ஆரம்பகாலகட்டமான 1990-களில், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளும் அதன் தொகுப்பாளர்களும் மிகவும் பிரபலமாக வலம் வந்தனர். உதாரணத்திற்கு டாப் 10 சுரேஷ், நீங்கள் கேட்ட பாடல் விஜய் சாரதி, திரைவிமர்சனம் ரத்னா ஆகியோரை சொல்லலாம். இதில், உங்கள் சாய்ஸ் பெப்ஸி உமாவிற்கு தான் அதிக ரசிகர்கள் இருந்தனர். கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உமா அதன்பின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரிதளவில் பங்கேற்கவில்லை.
பல ஆண்டுகளாக ரசிகர்களும் பெப்ஸி உமா என்ன செய்கிறார்? ஏது செய்கிறார்? என கேட்டு வந்தனர். இந்நிலையில், அண்மையில் விருது நிகழ்ச்சி ஒன்றில் பெப்ஸி உமா, ரத்னா, விஜய சாரதி ஆகிய மூவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. மேலும், நடிகை ரேகா நாயரும் அந்நிகழ்ச்சியின் போது பெப்ஸி உமாவை சந்தித்து பேசி அவருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். வைரலாகும் அந்த புகைப்படங்களில் தற்போதும் அழகு குன்றாமல் ஜொலிக்கும் பெப்ஸி உமாவை ரசிகர்கள் கண் இமைக்காமல் பார்த்து ரசித்து வருகின்றனர்.