சரோஜாதேவி மறைவு: முதல்வர், திரைப்பிரபலங்கள் இரங்கல் | சிவாஜிகணேசன் - சரோஜா தேவி இணைந்த நடித்த படங்கள் | எம்ஜிஆர் - சரோஜா தேவி இணைந்து நடித்த 26 படங்கள் | சூப்பர் குட் பிலிம்ஸ் 99வது தயாரிப்பில் விஷால் | 'தாமரை நெஞ்சம்' ஒரு படம் போதுமே: பாலசந்தர் அளித்த பதில் | தமிழில் தனது கடைசி படத்தில் நடித்த சரோஜா தேவி | ‛வெள்ளி விழா' படங்களில் முத்திரை பதித்த சரோஜா தேவி : வரிசை கட்டிய விருதுகள் | தனது உயிர் சென்னையில் பிரிய வேண்டும் என்று பேசியிருந்த சரோஜா தேவி | புதிய போட்டி வந்தாலும், சம்பளத்தை உயர்த்திய அனிருத் | தங்கள் தனிப்பட்ட சண்டையை மேடையில் பேசிய விஜய் சேதுபதி, பாண்டிராஜ் |
விஜய் டிவியின் 'சிப்பிக்குள் முத்து' தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் லாவண்யா. சீரியலில் நடிக்கும் முன்பே மாடல் அழகியாக பிரபலமான இவர், சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடி அலைந்த போது தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். பிரபல இயக்குநர் ஒருவர் லாவண்யாவை தன்னிடம் போனில் பேசிக்கொண்டே இருக்க வேண்டும், அப்படி செய்தால் ஆறு மாதத்திற்கு பிறகு அவரது கேரியரையே வேறு லெவலுக்கு எடுத்துச்செல்வேன் என்று கூறியுள்ளார். இதைகேட்டு அதிர்ந்தாலும், இந்த விவகாரத்தை இப்போது பெரிதாக்கினால் நமது எதிர்காலத்தை முடித்துவிடுவார்கள் என பயந்து அமைதியாகிவிட்டாராம். அதன்பிறகு அந்த இயக்குநரிடமிருந்தும் விலகிவிட்டாராம்.
லாவண்யா தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ரசிகர்கள் மத்தியில் லாவண்யாவுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.