அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் குமரன் தங்கராஜன். சினிமாவிலிருந்து சீரியலுக்கு நடிக்க வந்த இவருக்கு மீண்டும் சினிமா வட்டாரத்தில் நுழையும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அண்மையில் ஓடிடியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த வதந்தி வெப்சீரிஸில் குமரன் தங்கராஜன் நடித்திருந்தார். அதில் அவர் நடித்த கதாபாத்திரத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.
இதனையடுத்து, மாயாதோட்டா என்ற புதிய வெப்சீரிஸில் நடிக்கும் வாய்ப்பும் குமரனுக்கு கிடைத்தது. ஹிந்தி ஓடிடியான ஹங்காமா ப்ளேயில் இந்த தொடர் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் வரிசையாக வெப்சீரியஸில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் குமரன் இனி பாண்டியன் ஸ்டோர்ஸில் நடிப்பாரா? என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது.
இதற்கு பதிலளித்துள்ள குமரன், 'பாண்டியன் ஸ்டோர்ஸில் நடித்துக் கொண்டிருக்கும் போதே வதந்தி, மாயத்தோட்டா வெப் சீரிஸ்களில் நடித்து முடித்துவிட்டேன். ஆனால், இனிவரும் காலங்களில் திரைப்படங்கள், வெப்சீரிஸ்களில் நடிக்கும் போது கால்ஷீட் கொடுக்க நேரம் இல்லாமல் போனால் கண்டிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து விலகிவிடுவேன்' என்று கூறியுள்ளார்.
மாயத்தோட்டாவுக்கு பிறகு குமரன் எந்த ப்ராஜெக்டிலும் கமிட்டானதாக அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. எனவே, இன்னும் சில நாட்கள் அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நீடிப்பார் என ரசிகர்கள் திருப்தியடைந்துள்ளனர்.
--