'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது |

விஜய்சேதுபதி எப்போதுமே நட்புக்கு மரியாதை செய்கிறவர். இதனால் நண்பர்களுக்காக பல படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார். அந்த வரிசையில் தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் 'நினைத்தாலே இனிக்கும்' தொடரில் தனது சிறிய பங்களிப்பு ஒன்றை செய்திருக்கிறார்.
கதைப்படி தனது மனைவி பொம்மியை காப்பாற்ற கணவர் சித்தார்த் ஆம்புலன்ஸ் வாகனத்தை இயக்கி டோனரை தேடி போய் கொண்டிருக்கும் போது நடிகர் விஜய் சேதுபதியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. அதில் பேசும் விஜய் சேதுபதி, "உங்கள் மனைவி பொம்மி எப்படி இருக்காங்க பிரதர்" என நலம் விசாரிக்கிறார். அதற்கு சித்தார்த் “இன்னும் ஆபத்தான கண்டிஷன்லதான் சார் இருக்காங்க. டோனரை கடத்திட்டு போயிட்டாங்க சார். அவரைத் தேடித்தான் போயிட்டிருக்கேன்” என்கிறார். அதற்கு விஜய்சேதுபபி "எனது ரசிகர் மன்றத் தலைவருக்கு தகவல் சொல்றேன். என் ரசிகர்கள் எல்லாம் இதில் இறங்கி உங்களுக்கு உதவி செய்வார்கள்" என சொல்கிறார். விஜய்சேதுபதி ரசிகர் பைக்குகளில் விரைகிறார்கள். இப்படியான காட்சி நேற்று வெளியான புரமோவில் இடம் பெற்றுள்ளது.
பொம்மி விஜய்சேதுபதி ரசிகர்கள் உதவியால் குணமடைவதாகவும் அதற்கு நன்றி தெரிவிப்பதற்காக பொம்மியும், சித்தார்த்தும் விஜய்சேதுபதியை நேரில் சந்திப்பது போன்ற காட்சியும் இருப்பதாக சேனல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.




