தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் |
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் ‛க்ராண்ட் ஃபினாலே' இன்று (ஜனவரி, 22) நடைபெற்றது. இறுதிபோட்டியாளர்களான அசீம், ஷிவின், விக்ரமன் ஆகிய மூவரில் யார் வின்னர் என்று உலகெங்கிலும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
இறுதிநாளான இன்று ஷிவின் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், வெல்லப்போவது விக்ரமனா? அசீமா? என பரபரப்பான இறுதிக்கட்டம் ரசிகர்களின் ஹார்ட்பீட்டை எகிறச் செய்தது. ஒருவழியாக வின்னர் அசீம் தான் என்பதை கையை தூக்கிபிடித்து கமல்ஹாசன் அறிவித்தார். இதனையடுத்து வெற்றியாளரான அசீமுக்கு 50 லட்ச ரூபாய் பரிசுத்தொகையுடன் மாருதி சுசுகி கார் நிறுவனத்தின் நவீன சொகுசு வகை காரான ப்ரீசா காரும் வழங்கப்பட்டது.
டைட்டில் கோப்பையை கையில் வாங்கிய அசீம், 'எனது வெற்றி இறைவனுக்கு. எனக்கு சிறுவயதிலிருந்தே நல்லதை மட்டுமே சொல்லி வளர்த்த பெற்றோருக்கு நன்றி' எனக்கூறினார்.
மேலும், அசீமை பற்றி முதல்வாரத்திலிருந்தே நெகட்டிவாக பல கமெண்டுகள் வந்த நிலையில், '11 வாரமும் என்னை நாமினேட் செய்யுங்கள். மக்களின் ஆதரவுடன் நான் ஜெயித்துக்காட்டுவேன்' என்று கூறியிருந்தார். அதை குறிப்பிட்டு 'இதோ ரிசல்ட்' என கெத்தாக பிக்பாஸ் கோப்பையை தூக்கிக்காட்டினார்.
அசீமின் வெற்றிக்கு சக ஹவுஸ்மேட்டுகள் உட்பட பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.