ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பிக்பாஸ் பிரபலமான வனிதா விஜயகுமார் தற்போது சீரியல், சினிமா, பிசினஸ் என பிசியாக தனது வேலையை பார்த்து வருகிறார். அவ்வபோது ஜாலியாக நண்பர்களுடன் பார்ட்டிகளிலும் லூட்டி அடித்து வருகிறார். இந்நிலையில், அண்மையில் பார்ட்டி ஒன்றுக்கு சென்றிருந்த வனிதா அங்கே பிரபல நடிகை விமலா ராமன் தனது தாய் வழி உறவினர் என்பதை கண்டுபிடித்துள்ளார்.
இந்த சுவாரசியமான விஷயத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ள வனிதா, 'கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு பிறகு என் தாய் வழி உறவினரான, என் அன்புற்குரிய கசின் சிஸ்டர் விமலாராமனை அறிமுகப்படுத்துகிறேன். பெருமைமிகு சர்.சிடி முத்துசாமி ஐயரின் கொள்ளுபேத்திகள். ஆங்கிலேய காலத்தில் சென்னையின் முதல் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவர். இன்றும் அவரது சிலை உயர்நீதிமன்றத்தில் உயர்ந்து நிற்கிறது' என்று பதிவிட்டுள்ளார். நடிகை விமலா ராமன் தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் ஆக்டிவாக நடித்து வருகிறார்.